Breaking News

Content

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாதவலாயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம்!

Posted On :aturday January 17, 2015

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாதவலாயத்தில் 16.01.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு நபியை நேசிப்போம் என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாஹின் அவர்கள் தலைமை தாங்கினார். மாதவலாயம் முன்னாள் ஜமாஅத் தலைவர் K.M ஷா, SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாதவலாயம் நகர தலைவர் P. அசீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல காதர் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகர்கோவில் நகர தலைவர் M. இப்ராஹிம் அவர்களும் சிறப்புரையாற்றினார். H. முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.