Breaking News

Content

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம்!

Posted On :Sunday February 22, 2015

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இடலக்குடியில் 22.02.2014 மாலை 6.45 மணியளவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் மாஹின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக் வரவேற்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் அஜ்மீர் காஜா, பி.எஸ்.பி. மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் ஹாலித் முஹம்மது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.