Breaking News

Content

திட்டுவிளை ஏரியா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு!

Posted On :Sunday May 03, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் தழுவிய அளவில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. அனைத்து சமூக மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் உரிமை மீட்பிற்காவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அந்த இலட்சிய இலக்கின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மக்கள் சங்கமம் எனும் பெயரில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரி மாவட்டம் திட்டுவிளை ஏரியா சார்பாக மக்கள் சங்கமம் நிகழ்ச்சி திட்டுவிளை மர்ஹூம் சிக்கந்தர் ஆலீம் நினைவித்திடலில் வைத்து 2.3.2015 அன்று காலை 10 மணிக்கு துவங்கியது. மாநாட்டின் முதல் நாளான மே 2, சனிக்கிழமை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஜே.ரூஹுல் ஹக் அவர்கள் கொடியேற்ற மாநாடு துவங்கியது. அதனை தொடர்ந்து மர்ஹூம் அப்துல் அஜீஸ் திடலில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் மஜீத் துவங்கிவைத்தார். கண்காட்சியில் இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு, இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் திட்டுவிளையை பற்றிய வரலாற்று செய்திகள் இடம் பெற்றிருந்தது. மாநாட்டினை கண்டுகளிக்க வந்த மக்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலாச்சார நிகழ்சிகள் மற்றும் மேடைப்போட்டிகள் நடத்தப்பட்டது. மாநாட்டின் இரண்டாவது நாளான மே3, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திட்டுவிளை நகர தலைவர் முகம்மது ரிஸ்வான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாகீன் துவக்க உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஜே.ரூஹூல் ஹக், SDPI கட்சின் மாவட்ட பொது செயலாளர் ஹாஜா முஹைதீன், நகர தலைவர் முகம்மது சாதிக், நகர செயலாளர் ஹாஜா முஹைதீன், ஓய்வு பெற்ற தாசில்தார் அப்துல் சலாம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஓ.எம்.ஏ.மஜீத், வழக்கறிஞர் உதுமான் மைதீன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அப்துல் வஹ்ஹாப், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பி.பி.எஸ்.சாகுல் ஹமீது மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர். மக்கள் சங்கமம் பொதுக்கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.செய்யது அலி, SDPI கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் சமூக எழுச்சிக்கான நாடகங்களும் நடைபெற்றன. திட்டுவிளை ஏரியா மாநாட்டு தீர்மானங்கள்: 1) பாரதிய ஜனதா அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் ஓர் அசாதாரண சூழல் நிலவுகிறது. சமூகங்களுக்கு இடையே நீடிக்கும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பாஜக அமைச்சர்களும் அக்கட்சி தலைவர்களும் தொடர்ந்து வெறுப்பை உமிழும் வகையில் பேசி வருகின்றனர். சங்பரிவாரின் துணை அமைப்புகள் வகுப்புக் கலவர வெறியோடு செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது. வெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை காக்கும் பொறுப்பில் உள்ள பிரதமர் மோடி, இதனைக் கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருவதை ‘மக்கள் சங்கமம்’ மாநாட்டுக் குழு வன்மையாக கண்டிக்கிறது. 2) இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சச்சார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதார கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது. 3) மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் கட்சி என்று மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்தவுடன் நில அபகரிப்பு மசோதாவை நிறைவேற்றி விவசாயிகளைகளையும் மக்களையும் முதுகில் குத்தும் துரோகத்தை செய்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற நில அபகரிப்பு மசோதாவை ரத்து செய்ய கோரி நடைபெற்ற பேரணியில் ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார். நாடு முழவதும் இது போன்ற பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மரணங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நில அபகரிப்பு மசோதாவை கண்டித்து பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றாலும் பா.ஜ.க வை எதிர்ப்பதில் அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடினால் தான் விவசாயத்தையும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வையும் பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது. 4)திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகியும் திறமை வாய்ந்த பாராளுமன்ற சட்ட மன்ற உறுப்பினருமான காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களுடைய பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டு கொள்கிறது. 5)திட்டுவிளை மீன் கடை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது. 6)விநாயகர் ஊர்வலத்தின் போது திட்டுவிளை மார்த்தால் பகுதியில் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதி வழியாக பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்து மதவாத அமைப்புகள் ஊர்வலம் செல்லுவதை காவல்துறை உடனடியாக இந்த வருடம் நிறுத்த வேண்டும் என இந்த மாநாடு காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.