Breaking News

Content

கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சந்திப்பு!

Posted On :Friday November 20, 2015

சமூக நீதி போராளியும், இஸ்லாமிய அழைப்பாளரும், முதுபெரும் எழுத்தாளருமான கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களின் மனைவி திருமதி ஜமீலா அவர்கள் நவம்பர் 13 அன்று வஃபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி….) கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிக்கும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று (20-11-2015) அன்னாரின் இல்லத்திற்கு நேரடியாக சென்றார்கள். இந்த சந்திப்பின்போது பல்வேறு நினைவுகளை கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த சந்திப்பின்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக், புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் குமரி மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி, SDPI கட்சியின் குமரி மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது நூஹ் ஆகியோர் உடனிருந்தனர்