Breaking News

Content

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

கடலூர்: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதித்து சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதை தடை செய்ததும், இவ்வருடம் சுதந்திர தின பொதுக்கூட்டம் கூட நடத்துவதற்கு தடை விதித்திருப்பதும் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. காவல்துறையிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்த போது பல இடங்களில் “நீங்கள் ஒரு தனியார் அமைப்பு, ஆகவே ஒன்று நீங்கள் முந்தைய தினமான ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடுங்கள் அல்லது பிந்தைய தினமான ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடுங்கள். ஆகஸ்ட் 15 அன்று தனியார் நிறுவனங்களெல்லாம் சுதந்திர தினம் கொண்டாடக் கூடாது” எனக் கூறி மக்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தை அரசுடமையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில் தானா ? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பியுள்ளது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கடலூர் மாவட்ட தலைவர் s .அப்துல்லாஹ் , ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தமிழ் மாநில பொது செயலாளர் கபூர் மன்பஈ ஆகியோர் கண்டன உரையாற்றினர். தடையை மீறி நடந்த ஆர்பாட்டத்தில் 50 மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுபினர்கள் கைது செய்யபட்டனர்.