Breaking News

Content

திருவாரூர் மாவட்டம் – சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி

Posted On :Sunday August 19, 2012

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக திருவாரூர் நகரம், புலிவலம், அடியக்கமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துல் லத்திப் தலைமை வகித்தார். அடியக்கமங்கலத்தில் அடியக்கமங்கலம் ஜமாஅத் தலைவர் A.முகம்மது தாவூத் அவர்கள் கொடியேற்றினார் அதே போல புலிவலத்தில் புலிவலம் ஜமாஅத் செயலாளர் A.பைஜு ல் ஹக் அவர்களும் திருவாரூர் நகரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் மாநில பேச்சாளர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும் மற்றும் முஸ்லிம்கள் சுதந்திரதினத்தை கொண்டாட அனுமதி மறுத்து வரும் காவல்துறையின் விரோத போக்கையும் கண்டித்தும் சிறப்புரை ஆற்றினர். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.