Breaking News

Content

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” யோகா உடற்பயிற்சி வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted On :Saturday November 16, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டையில் யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழுப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது.