Breaking News

Content

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரங்கள்

Posted On :Friday November 02, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதில் நோட்டீஸ் பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் அடியக்க மங்களம் , புலிவலம் , கொடிக்கால் பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. வாகனப் பிரச்சாரத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக சென்று “பாப்புலர் ப்ரண்ட் ஏன் ?” எனும் தலைப்பிட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.