Breaking News

Content

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் முழு வழிகாட்டி – பொதக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On :Thursday January 17, 2013

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் முழு வழிகாட்டி எனும் தலைப்பில் மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொதுக் கூட்டம் ஜனவரி 13,2013 அன்று மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் “TOTAL MUSLIM EMPOWERMENT” எனும் தலைப்பிலும் மற்றும் நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்டின் மாநில பேச்சாளர் K.பாத்திமா கனி அவர்கள் “இன்றைய முஸ்லிம் பெண்கள் நிலை?” எனும் தலைப்பிலும் சிறப்புரை யாற்றினார்கள் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் , ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர் தங்களது திறமையை வெளிபடுத்திய விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. விழாவின் இறுதியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு அளிக்கப்பட்டது. முன்னதாக காலை 11 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கூத்தாநல்லூர், பூதமங்கலம். பொதக்குடி, அத்திக்கடை ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நீல நட்சத்திரம்பொறிக்கப்பட்ட மூவர்ண கொடியை ஏற்றினார்.