Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday February 19, 2013

கடலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . மேலும் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாச்சலம், கொள்ளுமேடு மற்றும் மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.