Breaking News

Content

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது

Posted On :Saturday February 02, 2013

கடலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தீயினால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் இழந்து நின்ற ஒரு குடும்பத்தினருக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களான ஃபேன் , மிக்ஸி , கேஸ் ஸ்டவ் மற்றும் பாய் போன்றவை வழங்கப்பட்டது.