Breaking News

Content

திருவாரூர் மாவட்டத்தில் அறிவகம் தஃவா குழு

Posted On :Sunday January 27, 2013

திருவாரூர் : முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு சார்பாக கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். அதன் ஒரு அங்கமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 21.01.2013 அன்று அறிவகம் தஃவா குழு முத்துப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை சந்தித்து இஸ்லாமிய பிரச்சாரப் பணியை மேற்கொண்டனர் . இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பல்வேறு நபர்களுக்கு திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது.