Breaking News

Content

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். இந்த கொடுஞ்செயலை கண்டித்தும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். ஐ.நா.சபை உடனடியாக தலையிட்டு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடுமுழுவதும் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்டம் சார்பாக நெல்லிக்குப்பத்தில் 12.7.2014 இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அப்துல்லா அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டங்களை பதிவு செய்தனர்.