Breaking News

Content

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இப்தார் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 20, 2014

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இப்தார் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி 20.7.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப் S.முஜீபுர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் பண்ருட்டி நகர தலைவர் S.அப்துல் ரஹீம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் H.நஸ்ருதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லாஹ் அவர்கள் ஏழை மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.அபுபக்கர் சித்திக் பிர்தெளசி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர் A.ஆரிஃப் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழை மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியுடன் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நிறைவுற்றது.