Breaking News

Content

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி, அஷ்ஃபகுல்லாஹ் கான், அசாஃப் அலி, குஞ்சாலி மறைக்காயர், ஷாநவாஸ் கான், கிட்வை ரஃபீக் அஹமது போன்ற தியாகிகளை நினைகூறும் விதமாகவும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், “சுதந்திரத்தின் காவலாளிகளாக இருப்போம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலம்பேட்டை, விருத்தாசலம், நெல்லிக்குப்பம், கொள்ளுமேடு, ஆயங்குடி ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலம்பேட்டையில் பில்லூர் ஜமாத் தலைவர் மற்றும் ஆயிஷா மகளிர் ஷரியத் கல்லூரி ஹாஜி A.முஹம்மது ஹனிஃபா அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் R.அன்வர் அவர்கள் உறுதி மொழி வாசித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லா அவர்கள் சுதந்திர தின உரையாற்றினர். விருத்தாசலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லா அவர்கள் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நகர மற்றும் யூனிட் தலைவர்கள், செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இறுதியாக இனிப்புகள் வழங்கப்பட்டது.