Breaking News

Content

புதுவையில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On : Friday September 19, 2014

பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது. இதன் ஒருபகுதியாக புதுச்சேரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மத துவேஷத்தை பரப்பியும் வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க வையும்,பா.ஜ.க MP சாக்ஷி மகராஜை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-09-2014 அன்று நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் அப்துல்லா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் இமாம், SDPI கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் நஸ்ருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பா.ஜ.கவின் மதவாத கொள்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.