Breaking News

Content

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Monday November 25, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி,யோகா பயிற்சி,மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுக்கூரில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24/11/2013 காலை 09:00மணி முதல் 12:00மணி வரை மதினா சூப்பர் மார்கெட் அருகில் மற்றும் மதுக்கூர் பேருந்துநிலையத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.