Breaking News

Content

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் அக்சஸ் இந்தியா மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, இணைந்து நடத்திய தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்!

Posted On :Saturday November 30, 2013

0th, +1 & +2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளியை ஏற்படுத்த தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 29.11.2013 வெள்ளி மாலை 3.00 மணிக்கு பள்ளி வளாக திடலில் நடைபெற்றது. இதில் ACCESS இந்தியாவின் Trainer கோவை சுல்தான் அவர்கள் CAREER GUIDANCE GOAL SETTING என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொடிக்கால்பாளையம் கிளை மூலமாக ஒருகிணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்கழகத்தின் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட & கிளை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.