Breaking News

Content

மங்களம் பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வழங்கிய மருத்துவ உதவி!

Posted On :Monday December 15, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, சுயதொழில் உதவித் தொகை, உயர்க் கல்வி வட்டியில்லா கல்விக் கடன், பள்ளி படிப்பை பாதியில் முடித்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், குடிநீர் வழங்கும் திட்டம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மங்களம் பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏழை குடும்பத்திற்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் உதவித் தொகையை பயனாளியிடம் வழங்கினர்.