Breaking News

Content

பாலஸ்தீனிய குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். இந்த கொடுஞ்செயலை கண்டித்தும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். ஐ.நா.சபை உடனடியாக தலையிட்டு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூரில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து (12-07-2014) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.