Breaking News

Content

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Wednesday August 06, 2014

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா என்னும் தான தர்மத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றது. இவ்வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக ஏழை எளியோர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.