Breaking News

Content

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் மற்றும் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா !

Posted On :Friday August 01, 2014

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அடியக்கமங்கலம் கிளை சார்பக ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் மற்றும் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி 01-08-2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை செய்யது அவர்கள் குர் ஆன் ஓதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அடியக்கமங்கலம் கிளை தலைவர் ஹசன் சாதலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் பற்றியும் மற்றும் எந்த இலக்கை கொண்டு பயணிக்கிறது என்பது குறித்து தனது தலைமையுரையில் எடுத்து சொன்னார். இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்டம், ஆண்கள் அறிவகத்தின் முதல்வரும் & பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற் குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்தீக் அவர்கள் இஸ்லாமியர்களின் கல்வி எப்படி இருக்கவேண்டும் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வரும் தலைமுறைகள் எல்லா துறையில் எப்படி மேம்படுத்தவேண்டும் என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார். நேஷனல் விமன் ஃப்ரண்ட் (NWF) ன் காரைக்கால் மாவட்ட தலைவி ஆலிமா A. ஆமினா உம்மாள் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்றும் இஸ்லாம் எப்படி இருக்க சொல்கிறது என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அடியக்கமங்கலம் ஊர் ஜமாஅத் தலைவர் M. பஷிருதீன், அடியக்கமங்கலம் J.M. School, தலைமை ஆசிரியை நஜிமா, SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் M.A லத்தீப், சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தின் இந்தியன் சோஷியல் ஃபாரம்(ISF) பொது செயலாளர் A. ரமூஜீதீன், அடியக்கமங்கலம் ஊரை சார்ந்த வழக்கறிஞர் மாமாஜி கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். இந்நிகழ்ச்சியில் ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்டுரை போட்டியில் 41 நபர்களும் , ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 230 நபர்களும் பங்குப் பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இதில் முதல் பரிசு : Rs. 3000/- ரொக்க பணமாக வழங்கபட்டது. இரண்டாம் பரிசு : Rs. 2000/- ரொக்க பணமாக வழங்கபட்டது. மூன்றாம் பரிசு : Rs. 1000/- ரொக்க பணமாக வழங்கபட்டது. கட்டுரை போட்டியில் சிறப்பு பரிசாக Rs. 500/- ரொக்க பணமாக வழங்கபட்டது. மேலும் கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் & கேள்வி பதில் போட்டியில் 50 மதிப்பெண்க்கு மேல் பெற்ற நபர்களுக்கு ஆறுதல் பரிசாக திருமறை தர்ஜுமத்துல் குர் ஆன் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என ஊர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் உட்பட 350க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.