Breaking News

Content

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித் தொகை பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Sunday August 03, 2014

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களை கவுரவிக்கும் வண்ணம், சிறுபான்மையின பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் +1 மாணவிகளுக்கு “அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித்தொகையை” காங்கிரஸ் அரசு அமல்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதன் விளைவாக இன்று சிறுபான்மை மக்களிடம் அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித் தொகை தொடர்பான விழிப்புணர்வை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. இம்முறை 2014-15 கல்வியாண்டிற்கான அபுல் கலாம் ஆஸாத் பெண்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான அறிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித் தொகை விழிப்புணர்வு மற்றும் பூத்தி செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.