Breaking News

Content

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி, அஷ்ஃபகுல்லாஹ் கான், அசாஃப் அலி, குஞ்சாலி மறைக்காயர், ஷாநவாஸ் கான், கிட்வை ரஃபீக் அஹமது போன்ற தியாகிகளை நினைகூறும் விதமாகவும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், “சுதந்திரத்தின் காவலாளிகளாக இருப்போம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கூத்தாநல்லூர், லக்ஷ்மாங்குடி, பூதமங்கலம், பொதக்குடி மற்றும் அத்திக்கடை ஆகிய கிளைகளில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கூத்தாநல்லூரில், கூத்தாநல்லூர் நகர 7 வார்டு கவுன்சிலரும் மற்றும் கூத்தாநல்லூர் ஜமாஅத் உறுப்பினருமான ஜனாப் ஹாஜா கமாலுதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். லக்ஷ்மாங்குடியில் தொழில்அதிபர் ஹாஜா பஹ்ருதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பூதமங்கலத்தில் சகோ தீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பொதக்குடியில் திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் செயற் குழு உறுப்பினர் சகோ நிஜாமுதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சகோ பார்ஹன் உரை நிகழ்த்தினார். அத்திக்கடையில் திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட பொருளார் சுல்தான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், யூனிட் தலைவர்கள், செயல்வீரர்கள், ஜமாத் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இறுதியாக இனிப்புகள் வழங்கப்பட்டது.