Breaking News

Content

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஜமாத்தார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday September 14, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகங்களுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் வண்ணமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தேசம் முழுவதும் நடத்தி வருகின்றது. இதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஜமாத்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக 14.09.2014 ஞாயிற்றுக்கிழமை கூத்தானல்லூரில் வைத்து ஜமாத்தார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்களும், மாநில செயலாளர் முஹம்மது ரஸீன் அவர்களும் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், செயலாளர் சேக் பரீத், ஜமாத்தலைவர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.