Breaking News

Content

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் விழிப்புனர்வு பொதுகூட்டம்!

Posted On :Thursday December 04, 2014

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாபரி மஸ்ஜித் விழிப்புனர்வு பொதுகூட்டம் பொதக்குடியில் 3/12/14 அன்று மாலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் D.M.H.அப்துல் ராஜிக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் M.A.லத்தீப் அவர்கள் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி பகுதி தலைவர் I. முஹமது பஃர்ஹான் அவர்கள் நன்றியுரையாற்றினார்.