Breaking News

Content

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இளையதலைமுறைக்கான பேச்சுப்போட்டி!

Posted On :Sunday January 04, 2015

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் முழுவழிக்காட்டி என்ற தலைப்பில் ஜனவரி 2,3 – 2015 ஆகிய தினங்களில் இளையதலைமுறைக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் அத்திக்கடை கிளை செயலாளர் சகோ.செய்யது உமர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் கூத்தாநல்லூர் நகர செயற்குழு உறுப்பினர் சகோ.தமீம் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். முகையிதீன் நூரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக அத்திக்கடை கிளை தலைவர் சகோ. முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.