Breaking News

Content

பூதமங்கலத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Saturday January 17, 2015

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மனித நேயத்தின் மாநபி முஹம்மது (ஸல்) பிரியமான நபி என்ற தலைப்பில் 17-01-2015 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கூத்தாநல்லூர் இமாம் ரஷிதியியா பள்ளிவாசல் இமாம் மௌலவி சிக்கந்தர் பாதுஷா உலவி அவர்கள் தலைமை தாங்கினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட துணைத்தலைவர் மௌலவி முஹம்மது அப்துல்லாஹ் சஆதி பாஜில் மன்பஈ, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் J.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் நாகர்கோவில் கலாச்சார பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி சௌகத் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக பூதமங்கலம் பள்ளிவாசல் இமாம் அப்துல் கையும் மன்பஈ அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.