Breaking News

மௌலானா அப்துல் வஹாப் கில்ஜியுடைய மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் இரங்கல்!

பிரபல இஸ்லாமிய அறிஞரும் மில்லி கவுன்சில் தலைவருமான மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி சாஹிபுடைய துக்கமான மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக  அராஜகங்கள் மற்றும் உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறும் தற்போதைய காலகட்டத்தில், நீதி மற்றும் அமைதிக்காக கொடுக்கப்பட்டு வந்த சக்திவாய்ந்த குரலை இந்திய முஸ்லிம் சமூகம் மௌலானா அப்துல் வாஹித் கில்ஜி சாஹிபுடைய மறைவின் மூலமாக இழந்துள்ளது. மௌலானா அப்துல் வாஹித் கில்ஜி சாஹிப் தேசத்தின் அஹ்லே ஹதீஸ் இயக்கத்தை தலைமை தாங்கி வந்த போதிலும் முஸ்லிம்கள் ஒன்றிணையக்கூடிய தளங்களான இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மற்றும்  மில்லி கவுன்சில் போன்றவற்றின்  தலைமை பொறுப்பிலும் செயல்பட்டு வந்துள்ளார்.

பல முஸ்லிம் அறிஞர்கள், சில மத விவகாரங்களில் குறிப்பிட்ட கருத்துக்களில் உறுதியாக இருப்பதும் கருத்து மாறுபாடுடைய மற்ற மஸ்லக் குழுக்களுடன் விலகியும் இருக்கின்றனர், ஆனால் மௌலானா அவர்கள் இதற்கு விதிவிலக்கானவர். மௌலானா அப்துல் வஹாப் கில்ஜியை பொறுத்தவரையில் அவருடைய மத கருத்துக்கள் மீதான உறுதி உம்மத்துடைய ஒற்றுமைக்கும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கும் உழைக்கக்கூடிய பலத்தை கொடுத்தது.

மறைந்த மௌலானாவுடன் பல்வேறு தளங்களில் சேர்ந்து பயணித்த நட்பை E.அபுபக்கர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அவருடைய மறைவு தனிப்பட்ட இழப்பாகவும் அவர் விவரித்துள்ளார். மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி சாஹிப் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் பணிகளுக்கு ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியடைந்தார் என்றும் E.அபுபக்கர் அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளார்கள். மேலும் இயக்கத்தின் மைல்கற்களாக இருந்த சில மாநாடுகளில் அவர் பங்குபெற்றதை E.அபுபக்கர் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *