Breaking News

பா.ஜ.க ஆட்சியின் கீழ் தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருவதால் கொலையாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களும் தைரியமாக உள்ளனர் : பாப்புலர் ஃப்ரண்ட்.

ஜம்முவில் உள்ள கதுஹா மாவட்டத்தை சார்ந்த ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்; உத்திர பிரதேசத்தில் உள்ள உன்னாவில் பா.ஜ.க MLA குல்தீப் சிங் செங்கரால் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்மையாக கண்டித்துள்ளார்.

மதவாத அரசியல் மாஃபியாவுடன் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் இருக்கும் சில அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்ததை பார்க்கும் பொழுது பாதுகாப்பு துறையும், ஃபாசிஸ சக்திகளும் ஒன்று சேர்ந்து எவ்வாறு குற்றங்களை செய்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதும், கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வருகின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போவதுமாகிய சம்பவங்களை பிரித்து பார்க்க முடியாது. 

ஆசிஃபா இறுதியாக படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு சில நாட்கள் ஹிந்து கோயிலில் அடைக்கப்பட்டதும், மேலும் இந்த கொலையாளிகளுக்கு உள்ளூர் ஹிந்து சமூகம் ஆதரவு வழங்கி வந்ததும், அவர்களுடைய ஒழுக்க சீர்கேட்டையும் மற்றவர்கள் மீதான வெறுப்பையும் காட்டுகின்றது. ஆகவே, இது தனிப்பட்ட கூட்டு வன்புணர்வு சம்பவமாக சித்தரிப்பது ஒரு ஏமாற்று செயலாகும்; மாறாக இது காஷ்மீர் முஸ்லிம்களை பழிவாங்கும் அரசியல் அஜெண்டாவின் ஒரு பகுதியாகும்.

முஸ்லிம்களை வெளியேற்றி இடத்தை ஆக்கிரமிக்கும் பா.ஜ.க அமைச்சர் லால் சிங்-ன் முயற்சியே இந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் நோக்கமாகும் என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஜம்முவின் பார் கவுன்சில் வழக்கறிஞர் உட்பட பொது மக்களின் ஒரு பகுதியினரின் உணர்ச்சியற்ற தன்மை என்பது சதித்திட்டத்தின் உச்சகட்டமாகும். உள்ளூர் பா.ஜ.க அமைச்சர் லால் சிங்-ன் பங்கு உட்பட அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்க நீதித்துறையின் மேற்பார்வையின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று E.அபுபக்கர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் உ.பி-யில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராக அரசியல் பின்னணி கொண்ட அராஜகங்கள் அதிகரிப்பதை குறித்து E.அபுபக்கர் அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் பா.ஜ.க தலைவர்களால் வழிநடத்தப்படும் ஹிந்துத்துவ கும்பல்கள் செய்யும் குற்றத்திற்கான தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருவது பா.ஜ.க MLA குல்தீப் சிங் போன்ற குற்றவாளிகளுக்கு கூட்டு வன்புணர்வு போன்ற வெறுக்கத்தக்க செயல்களை செய்ய உத்வேகத்தை கொடுக்கின்றது என்று அவர் சுட்டி காண்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தந்தையின் காவல் மரணம் என்பது கிரிமினல் பா.ஜ.க குண்டர்களின் கட்டுப்பாட்டில் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை இருப்பதையே காட்டுகின்றது. மதவாத ஃபாஸிச மாஃபியா ஆட்சியின் பிடியிலிருந்து மாநிலத்தை பாதுகாக்க உ.பி-யில் இருக்கும் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து கூட்டு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று E.அபுபக்கர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *