Breaking News

IPL க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தடியடி! : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில்  போராட்டங்கள் வலுபெற்று வரும் சூழலில் சென்னையில் நடைபெறும் IPL போட்டிகள் தமிழர்களின் போராட்டங்களை திசைதிருப்பும் என்பதால் IPL போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (10.04.2018) பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் சென்னை அண்ணா சாலையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்திய போதும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது IPL போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு 4000 காவல்துறையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தியிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. இது காவேரியை விட கிரிக்கெட் தான் மேலானது என்ற நிலைபாட்டில் அரசுகள் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
      
மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைக்கும் விதமாக காவல்துறையினர் போராட்டக்காரார்கள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். காவல்துறையின் இத்தகு அராஜக போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு தமிழக மக்களின் நியாயமான போராட்டங்களை தடியடி நடத்தி கைது செய்து முடக்கும் போக்கை தமிழக அரசு மற்றும் காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *