Breaking News

பத்திரிகையாளர்களின் படுகொலையை கண்டிக்கின்றோம்! டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்து தொடர வேண்டும்! மேற்கு வங்காளத்தில் கலவரம் செய்தவர்களை கட்டுப்படுத்த வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

பத்திரிகையாளர்கள் பணியில் இருக்கும் போது தொடர்ந்து அடுத்தடுத்து படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலையும் அதிர்ச்சியும் வெளிப்படுத்தியுள்ள பாப்புலர் ஃப்ரண்டின் மத்திய செயலக கூட்டம் பத்திரிகையாளர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பீகார் மற்றும் மத்திய பிரேதச மாநிலங்களில் குறைந்தது மூன்று பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகைத்துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டதால்தான் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. இது உலகத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு மிக மோசமான இடமாக நமது நாடு மாறக்கூடிய அபாயமான நிலையாகும். பிரசித்திபெற்ற கன்னட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷுடைய படுகொலை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் குற்றவாளி கும்பல்களும் தவறான தகவல்களால் வளர்ந்து வரும் மதவாத அமைப்புகளும் உண்மையான பத்திரிகைத்துறையின் செயல்பாடுகளை கண்டு அஞ்சுகின்றனர். அதிகாரத்தில் இருக்கும் அவர்களின் சேவகர்களால் இத்தகைய சக்திகள் உதவி செய்யப்படுவதால், இருவரும் ஒருசேர தேசத்திலிருக்கும் பத்திரிகை சுதந்திரத்தின் ஓட்டத்தை தடுக்க மீண்டும் மீண்டும் தைரியமாக பத்திரிகையாளர்களை குறிவைத்தும் படுகொலை செய்தும் வருகின்றனர். இத்தகைய சம்பவங்களில் பொது சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்திற்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளை மத்திய அரசாங்கம் திரும்பப்பெற வேண்டும் என்று இந்த கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிற்கான சிறுபான்மை அந்தஸ்திற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் வாக்குமூலம் (affidavit) என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரான இன்னொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை கழகம் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு தற்போதும் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் சிறுபான்மை அந்தஸ்திற்கு எதிரான நிலைப்பாடு என்பது முஸ்லிம் சமூகத்தை கல்வி ரீதியாக சக்திபடுத்துதலை தடுப்பதற்கான முயற்சியாகவே கருதப்படும், பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் தேசத்தில் தற்போதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலை கழகத்தின் அதிகாரிகள் கூட அதன் சிறுபான்மை அந்தஸ்தை பாதுகாக்க முன்வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்றாக இருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் மதக்கலவரத்தை அரங்கேற்றுவதற்கான ஹிந்துத்துவ சக்திகளின் முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டித்துள்ளது. ராம் நவமி பேரணி என்ற சாக்கில், ஹிந்துத்துவ சக்திகள் முஸ்லிம் கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். மேலும், சில மாவட்டங்களில் தாக்குதலையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். திரிபுராவில் பெற்ற தேர்தல் வெற்றிக்கு பிறகே சங்பரிவார குண்டர்களால் இந்த தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்ற கோணத்தில் இதை பார்க்க வேண்டும். மேற்கு வங்காள அரசு கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், சிறுபான்மையினரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் மத்திய செயலக கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமை தாங்கினார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *