Breaking News

முஸாஃபர் நகர் வழக்குகளை திரும்ப பெறக்கூடாது. – பாப்புலர் ஃப்ரண்ட் ; ஈராக்கில் இந்திய தொழிலாளர்கள் ISIS-அமைப்பால் கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் E.அபுபக்கர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க தலைவர்கள் உட்பட்டுள்ள முஸாஃபர் நகர் கலவர வழக்குகளை திரும்பபெறும் நடவடிக்கைகளை உ.பி அரசு தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக 13 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 131 கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டினை மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை SSP-க்கு உ.பி அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது
 
2013-ல் முஸாஃபர் நகரில் நடைபெற்ற கலவரத்தில் 63பேர் கொல்லப்பட்டு 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, அந்த ரணங்களே இன்னும் ஆறாத நிலையில் யோகி ஆதித்யநாத் அரசு, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்ச்சிப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. மேலும் இது நீதிபரிபாலன அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று E.அபுபக்கர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு அறிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் E.அபுபக்கர் அவர்கள் 39 இந்திய பணியாளர்கள்  ISISஅமைப்பால் படுகொலை செய்யப்பட்டதற்கு தமது கண்டனத்தை தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

2014-ல் ஈராக் மொசூல் நகரில் காணாமல் போனதிலிருந்து அவர்களுடைய மரணத்தை உறுதிசெய்ய நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது மிகப்பெரிய சோகம். வெளியுறவுத்துறை அமைச்சர் அப்போதிலிருந்து தொடர்ந்து அம்மக்கள் உயிரோடு இருப்பதாகவும் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நாட்டு மக்களுக்கு  பொய்யுரைத்து வந்துள்ளார். ஆகவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் E.அபுபக்கர் அவர்கள்  கேட்டுக்கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *