Breaking News

ஜார்கண்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு.

ஜார்கண்டில் கடந்த ஆண்டு அலிமுத்தீன் அன்சாரி அடித்து படுகொலை செய்யப்பட்ட  சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 சங்கபரிவார நபர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய  ராம்கர் விரைவு நீதிமன்றம் (FTC)-ன்  தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வரவேற்றுள்ளார்.

இத்தீர்ப்பு சங்கபரிவாருடன் தொடர்புடைய கவ்ரக்ஷா எனப்படும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உருவான குற்றவாளி கும்பலின் அச்சுறுத்தலுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு நிவாரணத்தையும் நீதியின் ஒளியையும் வழங்கியுள்ளது. இந்த கும்பல்களால் அதிகரித்து வரும் அடித்து படுகொலை செய்யும் சம்பவங்கள் தேசத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் சமீப காலங்களில் இத்தகைய பல்வேறு சம்பவங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாட்டிறைச்சி தடை மற்றும் கால்நடை வர்த்தகம்  மீதான கட்டுப்பாடுகள் போன்ற மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் குற்றவாளிகளுக்கு அப்பாவி மக்கள் மீது இத்தகைய செயல்களை செய்ய தார்மீக ஆதரவையும் தண்டனை குறித்தான பயமில்லாத நிலையையும் உருவாக்கியிருக்கின்றது. தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக கால்நடை வர்த்தகம் அல்லது பால் பண்ணைத் தொழிலை சார்ந்து இருக்கும் ஏழை முஸ்லிம்களே பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உண்மையா அல்லது பொய்யா என்பதைக்கூட பொருட்படுத்தாது வெறும் மாட்டிறைச்சியை கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் அடித்து படுகொலை செய்யப்படலாம் என்ற சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது. அடித்து படுகொலை செய்யும் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்ப்பு பசு பாதுகாவலர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க இது உதவும். அலிமுத்தீன் அன்சாரிக்கு நீதி கிடைக்க பாடுபட்ட அனைவருக்கும் எங்களது பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *