Breaking News

ம.நடராசன் அவர்களின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபம்! – மாநில துணைத் தலைவர் அறிக்கை.

புதிய பார்வை ஆசிரியரும், தமிழ் உணர்வாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான ம.நடராசன் அவர்களின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட நிலையில் சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த ம.நடராசன் சிகிச்சை பலனளிக்காததால் இன்று (20.03.2018) அதிகாலை 1.35 மணியளவில் மரணமடைந்தார். 

தஞ்சாவூரைச் சேர்ந்த ம.நடராசன் அவர்கள் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக தம் மக்கள் பணியை துவங்கி அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக செயல்பட்டவர். தீவிர பெரியார் சிந்தனை கொண்ட ம.நடராசன் அவர்கள் தீவிரமான ஃபாசிச எதிர்ப்பாளராகவும் திகழ்ந்தார். இவரின் தமிழீழ உரிமை போராட்டத்திற்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *