Breaking News

பாசிஸத்திற்கு எதிராக மக்கள் மேடை சார்பாக மதசார்பின்மையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடக்க இருந்த வாகனப் பிரச்சாரத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்.

பாசிஸத்திற்கு எதிராக மக்கள் மேடை சார்பாக மதசார்பின்மையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடக்க இருந்த வாகனப் பிரச்சாரத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்.

நமது தேசத்தின் அனைத்து அடிப்படைகளையும் தகர்த்து இந்துத்துவ கொள்கைகளை நடைமுறைபடுத்தும் வேலையை மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு செய்து வருகின்றது. ஒற்றுமையாக உள்ள மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவது, மதக் கலவரத்தை தூண்டுவது, ஜனநாயக நடைமுறைகளை படுகொலை செய்வது என எதிர்ப்புகளே இல்லா சர்வாதிகாரத்தை நோக்கி நமது தேசம் சென்று கொண்டிருக்கின்றது.

இந்தச் சூழலில் தேசத்தின் அடிப்படை கொள்கையான மதசார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற விழுமியங்களை தூக்கிப்பிடிக்கும் முகமாக பாசிசத்திற்கு எதிராக மக்கள் மேடை சார்பாக மதசார்பின்மையை வலியுறுத்தி மார்ச் 21 முதல் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடக்க இருந்த வாகனப் பிரச்சாரத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி  மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக, பிரிவினைவாத கோசத்தோடு ராமராஜ்யம் அமைப்போம் என கூறிக்கொண்டு தமிழகத்திற்குள் வரும் VHP-யின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசும், காவல்துறையும் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கத்தோடு நடைபெற உள்ள வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு மக்கள் மேடை நடத்த இருக்கும் வாகனப் பிரச்சாரத்திற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *