Breaking News

பாசிசத்திற்கு எதிராக அரசியல் ஒற்றுமை வலுவடைந்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!

உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் நடந்த மக்களவை இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மத்திய செயலக கூட்டம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக செயல்பட தயங்கிய வேளையில் பிராந்திய கட்சிகளான சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளதாக மத்திய செயலக கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டாக செயல்பட தயாரானால் பா.ஜ.க வெல்ல முடியாத கட்சி அல்ல என்பதை இந்த ஒற்றுமை நிரூபித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகியின் கொள்கைகளால் மக்கள் எந்த அளவுக்கு ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதை நீண்ட காலமாக பா.ஜ.கவின் கோட்டையாக திகழ்ந்த கோரக்பூரில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி காட்டுகிறது. பீகார் தேர்தல் முடிவு நிதீஷ் குமாரின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிரான ஒரு எச்சரிக்கையாகும். பா.ஜ.கவுக்கு எதிரான அவரது முந்தைய நிலைப்பாட்டிற்காகத்தான் பீகார் மக்கள் அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு வாக்களித்தனர். எனினும் அவர் தேசிய ஜனநாயககூட்டணியில் இணைந்து பீகார் மக்களுக்கு துரோகமிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்..

ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சலி

இம்மாதம் 14 ஆம் தேதி மரணமடைந்த உலகப்புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு மத்திய செயலக கூட்டம் அஞ்சலி செலுத்தியது. இளமைப்பருவத்திலிருந்தே குறைப்பாட்டு நோய் அவரை வாழ்நாள் முழுவதும் முடக்கிப் போட்டுவிட்டது. அவருக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு அவரது கனவுகளை நனவாக்குவதிலிருந்து தடுத்திட முடியவில்லை. தத்துவார்ந்த இயற்பியலை, புரட்சிகரமான படைப்புகளின் வடிவத்தில் அவர் நமக்கு அளித்தார். மனித உள்ளங்களை மகிழ்வித்த ஒரு அறிவியலாளரை மட்டும் உலகம் இழக்கவில்லை, மாறாக அமெரிக்க காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கும், ஃபலஸ்தீனத்தில் சியோனிச ஆக்கிரமிப்பிற்கும் எதிராக பேசிய ஒரு மனித நேயவாதியை இழந்துவிட்டது என்று இக்கூட்டம் பதிவு செய்தது.

இக்கூட்டத்திற்கு சேர்மன் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *