Breaking News

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து போராடும் – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா

இந்தியாவின் முக்கிய நகரங்களின் ஒன்றான பெங்களூரில் 2007 பிப்ரவரி 17 அன்று  பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா  துவக்கப்பட்டது. இதனை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை கொடி ஏற்ற  நிகழ்ச்சிகள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் என மக்கள் இயக்கமாக கொண்டாடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்வாண்டு  தமிழகத்தில்  வேலூர், திருச்சி, ஈரோடு மற்றும் தேனி (உத்தமபாளையம்)  ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் யூனிட்டி மார்ச் என்னும் ஒற்றுமை அணிவகுப்பை பிப்ரவரி 17 அன்று மாலை 4 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S P முஹம்மது நஸ்ருதீன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சீருடை அணிந்த பாப்புலர் ஃப்ரண்டின்  செயல்வீரர்கள் அணிவகுப்பில் மிடுக்கோடு நடக்க, தலைவர்களும், ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பொது மக்கள் பங்கேற்றனர். பேரணியின் நிறைவாக உழவர் சந்தை திடலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் S அமீர் பாஷா தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது, இக்கூட்டத்தில்  பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர்  M.முஹம்மது அலி ஜின்னா, SDPI கட்சி மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், பாப்புலர் ஃப்ரண்டின்   மாநில செயலாளர்  A.முஹைதீன் அப்துல் காதர், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) மாநில செயலாளர் M.தஸ்லிமா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(CFI) மாநில தலைவர் S.முஸ்தபா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.அப்சல் கான் நன்றியுரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தேசிய பொதுச்செயலாளர்  M.முஹம்மது அலி ஜின்னா “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு என அனைத்து பகுதிகளிலும், மாநிலங்களிலும் கால்பதித்து ஆல விருட்சமாக பாப்புலர் ஃப்ரண்ட் வளர்ந்து நிற்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சமூகநீதிக்கான அடையாளமாகவும்,  ஜனநாயக சக்தியாகவும்  மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் செயல்பாடுகளை முடக்குவதற்காக மத்திய பா ஜ க அரசாங்கம் அரசு ஏஜென்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட சில ஊடகங்களையும் பயன்படுத்தி அவதூறுகளை பரப்பி வருகின்றது. அரசாங்கத்தின் பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டமும் இதே போன்று நாடுமுழுவதும் நடைபெற்றுவரும் நிகழ்சிகளில் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமும் நிரூபிக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் –ன் தேசிய பொதுக்குழுவில் கடந்த 3 வருடங்களுக்கு  முன்பே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை மத்தியில் இருக்கும் பாஜக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பாப்புலர் ஃப்ரண்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி முயற்சி செய்துகொண்டு வருகிறது. ஒரு அரசு என்ற நிலையில் அதன் ராஜ தர்மத்தைக் கூட கடைபிடிப்பதற்கு முன்வரவில்லை. ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் இந்த சதி செயலுக்கு துணை போகவில்லை. இந்த அரசினுடைய நிலைப்பாட்டை நாம் பாராட்டுகின்றோம். மேலும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் மத்திய பாஜக அரசு நீதி பூர்வமாக செயல்பட வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறோம்.

அசாதாரண சூழலில் துவண்டு கிடக்கும் இந்திய சமூகத்திற்கு நம்பிக்கை அளித்து, ஒளிமயமான எதிர்காலத்தை பெற எதிர்நீச்சல் போட்டு ‘மக்களோடு நாங்கள், எங்களோடு மக்கள்’ என தோளோடு தோள் சேர்ந்து  முன்னேறி வருகிறது பாப்புலர் ஃ ப்ரண்ட் என்று குறிப்பிட்டார்.

 

Unity March @Trichy (2) Unity March @Trichy (1)Unity March @Trichy (1)Unity March @Trichy (3)Unity March @Trichy (5)Unity March @Trichy (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *