Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மக்கள் தொடர்பு தினம் (பிப்ரவரி 11, 2018) அன்று, யூனிட் முதல் தேசிய மட்டம் வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தேசம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து இயக்கத்துடைய செய்தியை எடுத்துரைத்தனர். அன்றைய நாள் முழுவதும் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி இயக்கத்தை அறிமுகப்படுத்தினர்.

தேசிய அளவிலான இயக்கம் என்ற தனது பிரகடனத்தின் 11-வது ஆண்டு நிறைவு தினத்தை குறிப்பிடும் விதத்தில் பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாடுவதற்கு முன்னதாக வீடு வீடாக சந்திப்பை நடத்தும் இந்த பிரச்சாரத்தை இயக்கத்தின் யூனிட்டுகள் மேற்கொண்டன. மக்கள் தொடர்பு தினம் அன்று 16 மாநிலங்களில் உள்ள சுமார் 5 மில்லியன் மக்களை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் பிரதிநிதிகள் சந்தித்தனர். மக்கள் தொடர்பு தின பணிகளின் ஒரு பகுதியாக மக்களை வீடு வீடாக சந்தித்ததுடன், சமூக சேவைகள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரமும் நடைபெற்றன. இன்னும் சில பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களிலும் நமது உறுப்பினர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.

கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கோவா, மஹாரஸ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பிஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொடர்பு தின பிரச்சாரம் நடைபெற்றது.

 

PR Day 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *