Breaking News

முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களை குறிவைத்து தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சினை செய்துவரும் இந்து முன்னணி குண்டர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 05.02.2018 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர், A.முஹம்மது பயாஸ் உட்பட மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பின்வருமாறு பேட்டியளித்தார்.

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து முஸ்லிம் விரோத போக்கை இலக்காக எடுத்து செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக, பொது சிவில் சட்டம், மாட்டிறைச்சி தடை என்று இப்போது முத்தலாக் தடை சட்டம் என்று கூறிக்கொண்டு மக்களவையில் விவாதித்து மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக வேண்டி நிற்கின்றது, இப்படிப்பட்ட இஸ்லாமிய விரோத போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மத வழிபாட்டின் அடிப்படையில் வாழ்வதற்கும், கடைபிடிப்பதற்கும் அரசியல் சாசன சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே பா.ஜ.க. அரசு கொண்டுவரவிருக்கும் முத்தலாக் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

பா.ஜ.க., இந்துமுன்னணி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல்களையும், சொத்துக்களையும் கரசேவை என்ற பெயரில் பள்ளிவாசல்களை இடிப்பதற்கும், சொத்துக்களை அபகரிக்கவும் முயற்சி செய்கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், நாகங்குடி மற்றும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் ஆனைகுளம் போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க முன் வர வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.

தமிழக மாணவர்களின் உரிமைகளை பறிக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுக்கின்றது. தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்கனவே கண்டித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு என்பது ஒரு கண்துடைப்பு நாடகமாக உள்ளது. எனவே தமிழக அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க நாளான பிப்ரவரி 17-ஐ தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருச்சி, வேலூர், கம்பம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் ஒற்றுமை பேரணியும் (யூனிட்டி மார்ச்), பொதுகூட்டங்களும், மேலும் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை செய்வது எனவும் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் குறிக்கோள்களையும், நோக்கத்தையும் தெரியப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *