Breaking News

உ.பி காஸ்கஞ் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்-ல் கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் சந்தித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வடக்கு மண்டல தலைவர் A.S இஸ்மாயீல், உ.பி மாநில நிர்வாகி மௌலானா முஃப்தி முஹம்மது ஷாசாத், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் உ.பி மேற்கு மாநில தலைவர் மௌலானா முஹம்மது ஷாதாப், அஜீஸ் காசிமி மற்றும் டாக்டர் நிஜாமுத்தீன் ஆகியோர் அடங்கிய குழு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். அவர்களுடைய நீதிக்கான போராட்டத்தில் அவர்களுடன் உறுதியாக நிற்பதாக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் பொருட்டு இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு  நடத்தப்பட்டது  என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக தலைவர்கள் அறிந்துகொண்டார்கள். ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடி கொண்டிருந்த பொழுது ABVP குண்டர்கள் அந்த பகுதியில் நுழைந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டக்கூடிய கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்திய தேசியக்கொடிக்கு பதிலாக காவிக் கொடியை ஏற்றுமாறு அவர்கள் முஸ்லிம்களை வற்புறுத்தியுள்ளனர். இது முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துப்பாக்கி மற்றும் வாள் உட்பட பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அந்த குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். இந்த சம்பவத்தில் 2 நபர்கள் கடுமையாக காயமுற்றனர். மேலும், இந்த வன்முறை அடுத்த நாள் வரை தொடர்ந்தது. அவர்கள் முஸ்லிம்களின் கடைகளை சூறையாடியதுடன் தீயும் வைத்தனர். காவல்துறை அந்த குண்டர்களை கட்டுப்படுத்துவதில் மட்டும் தோல்வியடையவில்லை. மாறாக, பல முஸ்லிம் ஆண்களையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நௌஷாத் மற்றும் அக்ரம் ஆகிய இரண்டு முஸ்லிம்கள் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரிவு 144 அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநபர்கள் காஸ்கஞ்க்-குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *