Breaking News

ஹஜ் கிரியயை முஸ்லிம்களிடத்தில் விட்டு விடு; மத நிகழ்ச்சிகளுக்கான அனைத்து மானியங்களையும் முடிவுக்கு கொண்டு வா : பாப்புலர் ஃப்ரண்ட்

ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத நிகழ்ச்சிகளை அந்தந்த மதத்தை சார்ந்தவர்களே பார்த்துக்கொள்ள அரசு விட்டுவிட வேண்டும்.மேலும் தேசத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் பல்வேறு மத நிகழ்ச்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக இருந்து வந்த ஹஜ் மானியத்தை திடீர் என்று நிறுத்தியது பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஹஜ் என்பது ஏதோ வெளியிலிருந்து கிடைக்கும் பொருளாதார உதவியை வைத்து நிறைவேற்றக் கூடிய செயல் அல்ல என்பதை ஏற்று கொள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஹஜ் மானியத்தை பற்றி அதிகமாக பேசப்பட்ட போதிலும், இதுவரை அது நிர்வகிக்கப்பட்ட வழிமுறையின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஹஜ் பயணம் மீதான ஏர் இந்தியாவின் ஏகபோக தனியுரிமையால் ஹஜ் மானியம் பயனற்றதாக ஆகிவிடுகின்றது. அரசு பல ஆண்டுகளாகவே யாத்ரீகர்களிடமிருந்து  மானியத்திற்கு வழங்கப்பட்ட தொகையை விட அதிகமானதையே  வசூலித்து வருகின்றது. ஹஜ் பயணத்தின் மீதான ஏர் இந்தியாவின் ஏகபோக தனியுரிமையும் அரசுடைய கட்டுப்பாடுகளும் எடுக்கப்பட்டுவிட்டால் ஹஜ் பயணத்திற்கான செலவு, மானியம் கொடுக்கப்பட்ட போது இருந்ததை விட வெகுவாக குறைந்து விடும். ஆகவே,  ஹஜ் யாத்ரீகர்களை சுரண்டும் ஏர் இந்தியாவிற்கு உதவி செய்வதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் குறைந்த செலவில் அதே சேவைகளை செய்ய விரும்பும் மற்ற விமான நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்.   

அரசு இந்த முடிவுக்கு காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டுகின்றது. மேலோட்டமாக இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியாது ஏனெனில் முக்கியத்துவம் வாய்ந்த  மற்ற நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு இதே அக்கறை இருப்பதாக நமக்கு தெரியவில்லை. மேலும், கும்ப மேலா, அமர்நாத், கைலாஷ் மானசா போன்ற பிற மதத்தவர்களுடைய பல்வேறு நிகழ்சிகளுக்கு இன்னமும் நிதி உதவி செய்யப்பட்டு வரும் நிலையில் ஹஜ் மானியத்தை மட்டும் திடீரென நிறுத்தியதற்கு எந்த விளக்கமும் கூறப்படவில்லை. ஆகையால் இதை  பாரபட்சமான மற்றும் பிரிவினைவாத முடிவாக மட்டுமே பார்க்க முடியும். ஆகவே, ஹஜ் மானியத்துடன் சேர்த்து அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் தற்போது செய்யப்பட்டு வரும் அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுக்கிறது. 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *