Breaking News

நீதித்துறையை அரசியல்மயமாக்குவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும் – உச்ச நீதின்ற மூத்த நீதிபதிகளால் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் கவலை அளிக்கின்றது – பாப்புலர் ஃப்ரண்ட்.

உச்ச நீதிமன்ற செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஊடகத்தின் முன் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

நமது தேசத்தின் மூத்த நீதிபதிகளுள் நான்கு நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை நீதித்துறையின் நடைமுறைக்குள் வெளிப்படுத்த முடியாததால் அல்லது தனது குழு உறுப்பினர்களுக்குள் தீர்வு கான முடியாததால் பொதுமக்களிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள், இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் நீதிபதிகள் மீதான அரசியல் செல்வாக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சீர்கேடுகளை மாண்புமிகு நீதிபதிகள் தேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் போது இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI)-ன் புறத்திலிருந்து தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது, இது உச்ச நீதிமன்றத்தின் நடுநிலையை குறித்து பொதுமக்கள் அச்சமடையக் கூடிய செய்தியாக உள்ளது. இந்த வழக்குகளில் நீதிபதி லோயாவுடைய படுகொலை வழக்கும் உள்ளடங்கியுள்ளது. அதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தொழில் ரீதியாக தனது செயல்பாடுகளை நியாயப்படுத்திய போதிலும், பொதுமக்களின் பார்வையில் அவரது நடத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரியதாகவே இருக்கும். இந்த பிரச்சனை இப்போது சரி செய்யப்படவில்லை என்றால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அது அழித்துவிடும். உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை தேசத்திற்கு விளக்குவது இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) மீது கடமையாகும். பல்வேறு வழிகளில் தலையிட்டு நீதித்துறையை அழிப்பதிலிருந்து ஆளும் பாஜக விலகிக் கொள்ள வேண்டும். மேலும் குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து தனது கட்சி தலைவர்களை பாஜக தடுக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையின் விபரீதத்தை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் பாதுகாக்க பொது மக்களும் அரசியல் கட்சிகளும் முன் வர வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

“நாங்கள் மக்களுடன், மக்கள் எங்களுடன்” என்ற முழக்கத்தை முன் வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்சிகள் மூலம் பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை கொண்டாட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 முதல் 16 வரை “மக்கள் தொடர்பு வாரம்” என்ற அடிப்படையில் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இயக்கத்தின் செய்தியை கொண்டு செல்லும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் அனைத்து யூனிட்டுகளும் வீடு வீடாக மக்களை சந்திக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *