Breaking News

தலித்துகளை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை

பீமா கோரேகான் போரின் 200வது நினைவு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த தலித்துகள் மீதான தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E. அபுபக்கர் கண்டித்துள்ளார். இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதையே அங்குள்ள சூழ்நிலைகள் காட்டுகின்றது. தலித்துகளுக்கு எதிராக மராத்தியர்களை திருப்புவதன் மூலம் தலித்துகளை ஒடுக்குவதற்காக அந்த மாநிலத்தில் இருக்கும் ஹிந்துத்துவ சக்திகள் எடுத்த முயற்சியின் ஒரு பகுதியே இது. நினைவு தினத்தை கொண்டாடுவதற்காக ஒன்று கூடியிருந்த மக்களை தாக்குவதற்கு தயாராகி கொண்டிருந்த குண்டர்களை தடுக்க மாநில அரசாங்கமும் காவல் துறையும் தோற்றுவிட்டது. இறுதியில் இது ஒரு அப்பாவியின் மரணத்தில் முடிவடைந்தது மேலும் வன்முறை பரவுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. தற்போது காவல்துறை, நிராயுதபாணியாக இருந்த மக்களை தாக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட MLA ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் போன்ற தலைவர்கள் உட்பட அப்பாவிகளை தவறாக சிக்கவைத்துள்ளது.

பல்லாயிரம் வருடங்களாக பிராமணிய அடக்குமுறைக்கு எதிராக தனது உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க போராடும் தலித்துகள் மீதான ஜாதிய வன்முறைக்கு இது மற்றொரு உதாரணமாகும். 2014ல் ஹிந்துத்துவ சக்திகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இத்தகைய வன்முறைகள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தீவிரமாகியுள்ளன. குஜராத்தில் இறந்துபோன பசு மாட்டின் தோலை உரித்ததற்காக தலித் தொழிலாளர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்; ஹரியானாவில் உயர் ஜாதியினர்களால் தலித் குழந்தை உயிருடன் ஏரித்து கொல்லப்பட்டது; உபி–யில் கோயிலில் நுழைந்ததற்காக தலித் முதியவர் எரித்து கொல்லப்பட்டார்; இதுமட்டுமில்லாமல் பட்டியல் மேலும் தொடர்கின்றது. இதற்கு எதிராக போராடும் மக்கள் கொடூரமான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். பீம் ஆர்மி தலைவர் சந்திர ஷேகர் ஆசாத், NSA வின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கிறார்.

இந்த கொடிய சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; மேலும் இந்த அராஜகத்தில் இறந்துபோனவரின் குடும்பத்திற்கும், காயமடைந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். தங்களுடைய கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் தலித் சமூகத்தின் போராட்டத்திற்கு தேசத்தின் அனைத்து குடிமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *