Breaking News

மேற்கு வங்காளத்திலுள்ள அஃப்ரஜுல் குடும்பத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் சந்திப்பு.

முஹம்மது அஃப்ரஜுல் கானின் குடும்பத்தை 21 டிசம்பர்  2017 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர், மேற்கு வங்காள மாநில தலைவர் முஹம்மது ஷஹாபுதீன் மற்றும் மண்டல செயலாளர் ஆரிஃப் கான் ஆகியோர் அடங்கிய குழு சந்தித்தது. 6 டிசம்பர் 2017 அன்று லவ் ஜிஹாத் என்ற போலியான குற்றச்சாட்டை முன் வைத்து ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஷாம்பு லால் ரீகர் என்ற ஹிந்து மத வெறியனால் முஹம்மது அஃப்ரஜுல் கான் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அஃப்ரஜுல் (50) மேற்கு வங்காள மாநில மால்டா மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் காவல் நிலையத்தின் கீழ் இருக்கும் சையத்பூர் கிராமத்தை சார்ந்தவர் ஆவார். இவர் படுகொலை பற்றிய அதிர்ச்சி செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றன. இந்த சம்பவத்தை அறிந்தவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மேற்கு வங்காள மாநில பொதுச்செயலாளர்  டாக்டர் முஹம்மது மினாருல் சேக் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழு  8 டிசம்பர் 2017 அன்று அஃப்ரஜுல் குடும்பத்தினரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் வருகை தந்த சமயத்தில், அஃப்ரஜுல் குடும்பம் மற்றும் உள்ளூர் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியை கிராமத்தின் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். E.அபுபக்கர், அஃப்ரஜுல் குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் இறந்துபோன அஃப்ரஜுல் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தித்தனர். அஃப்ரஜுல் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக ரூபாய் 100000/-  கொடுப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் வாக்குறுதி அளித்தார். மேலும் அஃப்ரஜுல் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உடன் இருக்கும் என்று உறுதி அளித்தார். அஃப்ரஜுல் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் குழு முன் வைத்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300க்கும் அதிகமான மக்கள் தேசிய தலைவரின் பேச்சை ஆர்வமாக கேட்டறிந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த பொழுது, பாப்புலர் ஃப்ரண்ட்-ன் ராஜஸ்தான் மாநில நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போனவரின் உடலை மால்டாவிற்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் மற்றும் அவரது குழுவுடைய வருகை, கிராமத்து மக்கள் மத்தியில் நிச்சயமாக இறுதியில் நீதி வெல்லும் என்ற உறுதியான நம்பிக்கையை ஏற்படுதியுள்ளது.

 

CHAIRMAN VISIT (2)CHAIRMAN VISIT (5)CHAIRMAN VISIT (1)CHAIRMAN VISIT (3)CHAIRMAN VISIT (4)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *