Breaking News

ஸ்கூல் சலோ பணிகளுக்கு ஆதரவு தருமாறு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டத்தில், ஸ்கூல் சலோ என்ற 2018-ம் ஆண்டின் தேசிய அளவிலான கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட பல்வேறு பணிகளை செய்து முடிக்க தாராளமான பங்களிப்பை அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகாலமாக பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்தை இயக்கம் வெற்றிகரமாக நடத்திவந்துள்ளது. புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 60%மாணவர்கள் ஆரம்ப கல்வியை படித்து முடிக்காமல் இருக்கிறார்கள், மேலும் அவர்களில் 90% மாணவர்கள் பள்ளி கல்வியை தொடர முடியாமல் பல்வேறு கட்டங்களில் இடை நிருத்தம் செய்து விடுகின்றனர். கிராமங்கள் மற்றும் நகர்புற சேரிகளிலிருந்து அதிக அளவிலான குழந்தைகள் பள்ளிகளில் சேருவதே இல்லை. குடும்பத்தின் கல்வியறிவு மற்றும் கல்விக் கணக்கெடுப்புகள், பள்ளியில் சேர்ப்பதற்காக குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை ஊக்குவித்தல், கல்வியை இடை நிறுத்தம் செய்தவர்களை கணக்கெடுத்தல் மற்றும் பள்ளியில் மீண்டும் சேர்த்தல் போன்ற பல்வேறு பணிகளை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் செய்து வருகின்றது. வழக்கம் போல், விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன், வருகின்ற 2018-ம் ஆண்டும் கல்வி உபகரணங்கள் அடங்கிய 'ஸ்கூல் கிட்' ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த பிரச்சாரம் ஜனவரி – பிப்ரவரியில் கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் மற்றும் ஏப்ரல் – மே மாதங்களில் மற்ற மாநிலங்களிலும் நடைபெற இருக்கின்றது.

இந்த பணிகளின் தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும், சில தேர்தெடுக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களை சர்வ ஷிக்ஷா கிராம் (SSG)திட்டத்தின் கீழ் உதவி செய்யப்பட்டு வருகின்றது, மேலும் டியூஷன் சென்டர்களும் அங்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்காக “எடுகேர் ஃபன்ட்” (EDU CARE) என்ற சிறப்பு நிதியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கியுள்ளது. மேலும் இந்த மனிதநேய பணிக்கு தாராளமாக தங்களின் பங்களிப்பை அளிக்குமாறு பொதுமக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இப்படிக்கு

M. முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *