Breaking News

அஸ்ஸாம் குடியுரிமை வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!

அஸ்ஸாம் மக்களின் குடியுரிமை தொடர்பான விஷயத்தில், பஞ்சாயத்து சான்றிதழ் குடியுரிமைக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது மேலும் பஞ்சாயத்து சான்றிதழ் சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

1977-லிருந்து வகுப்புவாத சக்திகளின் சதி திட்டத்தின் காரணமாக அஸ்ஸாமின் பூர்வீக குடிமக்களான லட்சோப லட்ச வங்காள மொழி பேசும் முஸ்லிம் மற்றும் ஹிந்துக்களை வங்காள தேசத்துகாரர்கள் (பங்களாதேஷி) என்று முத்திரையிடப்பட்டு வருகின்றது. அவர்களுடைய குடியுரிமையை நிரூபிக்க வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு சட்டங்கள், அறிவிப்புகள், அரசாங்க ஆணைகள் போன்றவற்றை எதிர்த்து நீண்ட காலமாகவே போராட்டம் நடைபெற்று வருகின்றது. அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதே சுமத்தப்படுகிறது.

17 டிசம்பர் 2014 அன்று குடிமக்களின் தேசியப்பதிவு (NRC) வரைவை தயாரிக்க மற்றும் புதுப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் 31 டிசம்பர் 2017-க்குள் NRC வரைவை வெளியிட வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது. அனைத்து இந்திய குடிமக்களின் விவரங்களை கொண்டுள்ள பதிவேடே NRC எனப்படும். 1951ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பதிவுசெய்யப்பட்ட அணைத்து மக்களுடைய விவரங்களை வைத்து NRC உருவாக்கப்பட்டது. NRC புதுப்பித்தல் (அப்டேஷன்) நடைபெற்ற பொழுது அஸ்ஸாமில் குடியிருந்த அனைத்து குடிமக்களுடைய பெயரை சேர்க்கும் முறையே NRC புதுபித்தல் (அப்டேஷன் அல்லது அப் க்ரேடேஷன்) எனப்படும்.

இந்த புதுப்பித்தல்(அப்டேஷன்) கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அரசு பட்டியிலிட்ட பதினான்கு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தாலே NRCல் பதிவு செய்ய அது போதுமானதாக இருந்தது. உள்ளூர் பஞ்சாயத்து சான்றிதழும் அதில் ஒன்றாகும். ஹிந்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட 48 லட்சம் மக்கள் இந்த சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். மேலும் அதில் பாதி நபர்கள் பெண்களே ஆவர். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, குவஹாத்தி உயர் நீதி மன்றம் NRC அதிகாரிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட இந்த பஞ்சாயத்து சான்றிதழ்களை செல்லாது என்று அறிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இப்பொழுது நீதிபதி ரஞ்சன் கோகி மற்றும் நீதிபதி ரோஹின்டன் F.நரிமன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை தள்ளுபடி செய்துள்ளனர்.

தனது தந்தை மற்றும் கணவனுடன் தொடர்பு கொள்ள பஞ்சாயத்து ஆவணத்தை பயன்படுத்திய 47.09 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு இந்த உத்தரவு நிவாரணமாகும். இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இப்படிக்கு
 
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்,
புதுதில்லி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *