Breaking News

இராஜஸ்தானில் நிகழ்ந்த முஹம்மது அப்ரசூல் படுகொலை! – நீதி கேட்டு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

மேற்கு வங்கத்தில் வசித்து வந்த 48 வயதுடைய முஹம்மது அப்ரசூல் ராஜஸ்தானில் வைத்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. முஹம்மது அப்ரசூல் கரிந்த நிலையில் இருக்கக்கூடிய புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் காவல்துறையினர் கொலையாளி சாம்பு லால் ரிகாரையும், அதை காணொளி மூலம் படம் பிடித்த அவரது உறவினரையும் கைது செய்திருக்கிறார்கள். இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்படுகொலைக்கு முக்கியமான காரணம் இந்துத்துவ பாசிஸ்டுகளின் பொய் பிரச்சாரமான லவ் ஜிஹாத். ராஜஸ்தானில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 9 மாதங்களில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இச்சம்பவங்களில் முஸ்லிம்களின் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பால் உற்பத்தி செய்யக்கூடிய பெஹ்லுகான் பெஹ்ராரில் வைத்து பசுகுண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 16-ம் தேதி தூய்மை இந்தியா என்கிற பேரில் ஜாபர் கான் என்பவர் பிரதாப்கர் நகரத்தில் வைத்து நகராட்சி தலைவர் மற்றும் தூய்மை பணியாளரால் அடித்தே கொல்லப்பட்டார். கொலையாளிகளை காவல்துறை கைது செய்யாததோடு மட்டுமின்றி ஜாபர் கான் மாரடைப்பால் மரணித்தார் என்று பிரதாப்கர் நகராட்சி தனது ஊழியர்களை தண்டனையிலிருந்து பாதுகாக்கிறது. நவம்பர் 10-ம் தேதி உமர்கானும் அவர் உடன் பணிபுரிபவர்களும் மாடுகளை ஏற்றிக்கொண்டிருந்த பொழுது ஆள்வார் மாவட்டம் கோவிந்த்கர் தெஹ்சில் வைத்து பசுகுண்டர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டதோடு 15-கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே பாலத்தின் அருகே அவரது உடலை வீசி சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார்கள்.

முஹம்மது அப்ரசூல் படுகொலை பற்றிய தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 7-ம் தேதி சம்பவம் நிகழ்ந்த ராஜ்சமந்த் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு காவல்துறை அதிகாரி அசோக் சிரிவஸ்தவ், காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட ஆட்சியர் பிரேம் சந்த் பரூஆ ஆகியோரை சந்தித்து முறையிட்டார்கள். மேலும் நீதி விசாரணை வேண்டியும் இச்சதிகளுக்கு பின்னால் உள்ளவர்களை வெளிக்கொண்டுவந்து அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
ராஜஸ்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *