Breaking News

தொல். திருமாவளவன் அவர்களை கொலை செய்து தலையை எடுத்து வருபவர்களுக்கு பரிசு அறிவித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை கொலை செய்து தலையை எடுத்து வருபவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என இந்து முன்னேற்ற கழகம் என்ற பிரிவினைவாத பாசிச அமைப்பின் தலைவர் பேசியுள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. இந்த தேசத்தின் புற்றுநோயாக உள்ள சங்பரிவார அமைப்புகளின் தேச விரோத பிரிவினைவாத செயல்களை யாரெல்லாம் விமர்சிக்கின்றார்களோ அவர்களை மிரட்டுவது, படுகொலை செய்வது என தங்களின் தீவிரவாத செயலை தொடர்ந்து தேசம் முழுவதும் அரங்கேற்றி வருகின்றனர். நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்களும், பத்திரிகையாளர்களும் சங்பரிவார அமைப்புகளால் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகின்றோம். இன்னும் அவர்களை எதிர்க்கக்கூடிய தலைவர்களின் தலைக்கு பரிசு அறிவிப்புகளை தேசம் முழுவதும் அறிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின் இது போன்ற தீவிரவாத செயல்களை எந்தவிதமான பயமும் இன்றி ஹிந்துத்துவ குண்டர்கள் தைரியமாக செய்து வருகின்றனர். தேசத்தில் வாழும் ஹிந்து சமூகத்தின் பெயரால் இப்படிப்பட்ட கொடூரங்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர் என்பதை ஹிந்து சமூகத்தை சார்ந்த எனது உறவுகள் விளங்கி கொள்ள வேண்டும். தர்க்க ரீதியாக திருமாவளவன் அவர்கள் சுட்டிகாட்டிய விஷயங்களை இங்குள்ள சங்பரிவார அமைப்புகள் தங்களை வளர்த்துக்கொள்ளவும், மக்களிடம் வகுப்புவாத வெறியை ஏற்படுத்தவும் தவறாக சித்தரித்து பேசி வருகின்றனர்.

தேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ஹிந்து கோவில்களை இடித்துத்தான் கட்டப்பட்டுள்ளது என்ற பிரச்சாரம் அரசியல் ஆதாயங்களுக்காக பா.ஜ.க உட்பட பல்வேறு சங்பரிவார அமைப்பை சார்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒற்றுமையாக இருக்கும் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் அடைய இவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் இராமர் பெயரால் பாபரி பள்ளியை இடித்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்தனர் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும். சமீபத்தில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பள்ளிவாசலாக இருக்கும் டெல்லி ஜும்மா மஸ்ஜித் ஜமூனா தேவி கோவிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்று பா.ஜ.க மக்களவை உறுப்பினர் வினை கட்டியார் விஷமத்தனமாக கூறியுள்ளார். இது போன்றவர்கள் தான் உண்மையில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்து சமூகத்தின் பெயரால் ஒன்றாக இருக்கும் மக்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் ஹிந்துத்துவ பிரிவினைவாத அமைப்புகளை ஹிந்து சமூகம் புறக்கணிக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைக்கு விலை வைத்த ஹிந்துத்துவ பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி உடனே கைது செய்யப்படவேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு

A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *