Breaking News

பாபரி மஸ்ஜித் – தண்டனையையும், மறு கட்டுமானத்தையும் நினைவூட்டிய கலந்துரையாடல் நிகழ்ச்சி. – “என்றும் நம் நினைவில்” புத்தகம் மற்றும் போஸ்டர் வெளியீடு.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக “நினைவுகூர்வோம்: 25 ஆண்டுகளில் பாபரி” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி  புதுடெல்லி தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி(தலைவர், முஸ்லிம் பொலிடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா), ஸ்ரீனிவாசன் ராகவன்(தலைவர் லோக் ராஜ் சங்கதன்), முஃப்தி இஜாஸ் அர்ஷத் காசிமி (தலைவர், முஸ்லிம் தனியார் சட்டவாரியம்), அசோக் பாரதி (தலைவர், ஜன் சம்மான் பார்ட்டி) மற்றும் முஹம்மது ஷாஃபி (தேசிய பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலை துவக்கி வைத்து உரையாற்றிய  பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய  செயற்குழு  உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் ’25 ஆண்டுகள் கழிந்த போதும் கூட நீதிமன்றம் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளை தண்டிப்பதில் பெரும் இடைவெளியை கடைபிடிக்கின்றது’ என்று தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,’நீதி மன்றங்கள் கற்பனை மற்றும் நம்பிக்கையின் பின்னால் செல்லவேண்டுமா அல்லது உண்மை மற்றும் ஆதாரங்களின் பின்னால் செல்லவேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார் ’.

டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி கூறுகையில்,’கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கறுப்பு தினமான டிசம்பர் 6, 1992 அன்று நாடு எதற்கெல்லாம் சாட்சியம் வகித்ததோ அதுகுறித்து தனித்துவமான விளக்கத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.’ என்றார்.

அசோக் பாரதி கூறுகையில்,’நமது அமைப்பு முறையின் உயர்சாதி பாரபட்சங்கள் நன்கு தெரிந்ததே.இதில் நீதித்துறையும் விதிவிலக்கல்ல.அதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளாக பாபரி மஸ்ஜித் குறித்த சச்சரவு உச்சநீதிமன்றத்தில் இன்னமும் மறதி நிலையில் உள்ளது.’ என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் இயக்கம் பிரசுரித்த “Babri Masjid: Lest We Forget”.(பாபரி மஸ்ஜித்:என்றும் நம் நினைவில்”) என்ற ஆங்கிலம் மற்றும் உருது நூலை வெளியிட்டார்.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் பல்வேறு மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட போஸ்டரை பாப்புலர் ஃப்ரண்டின் வடக்கு மண்டல தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள்  வெளியிட்டார்.

எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நிறைவுரை ஆற்றினார். அவர் தனது உரையில்,”கற்பனைகள் மற்றும் போலியான கோட்பாடுகளின் தொடர் பரப்புரை,வஞ்சக நடவடிக்கை மூலம் 400 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை வலதுசாரி இந்துத்துவ படைகளால் இடிக்க முடியுமென்றால், உண்மை மற்றும் ஆதாரத்தின் உதவியுடன் இந்த மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் தேசத்தால் ஏன் கட்டமுடியாது?” என்று கேள்வி எழுப்பினார்.

Releasing of Babri Masjid Poster Releasing of Babri Masjid BookM Mohd Ali Jinnah(G.S, Popular Front of India) Audience

 

இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *